/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையில் இருந்து கிடைக்கும் வருமானம் துாய்மை பணியாளர்களுக்கு சன்மானம்
/
குப்பையில் இருந்து கிடைக்கும் வருமானம் துாய்மை பணியாளர்களுக்கு சன்மானம்
குப்பையில் இருந்து கிடைக்கும் வருமானம் துாய்மை பணியாளர்களுக்கு சன்மானம்
குப்பையில் இருந்து கிடைக்கும் வருமானம் துாய்மை பணியாளர்களுக்கு சன்மானம்
ADDED : மே 20, 2024 01:50 AM

ராயபுரம்:ராயபுரம் மண்டலத்தில் 49வது வார்டு முதல் 63வது வார்டு வரை உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் உள்ள ேஹட்டல்கள், கடைகள், காய்கறி சந்தைகள், நிறுவனங்கள், மார்க்கெட்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை சேகரிக்கின்றனர்.
பின், அவற்றை குப்பை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு வருகின்றனர். அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கின்றனர். பின் உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், தெர்மாகோல், இரும்பு, உலோக பொருள்கள், அட்டைகள் ஆகியவற்றை தரம் பிரித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
மேலும், மெத்தைகள், செருப்புகள், துணிகள், பள்ளி பைகள், டயர்கள், தேங்காய் மட்டை உள்ளிட்டவை, குப்பை மறுசுழற்சி மையத்தில் தரம் பிரிக்கப்படுகின்றன. பின் அவற்றை மொத்த விற்பனையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இவற்றின் மூலம் மாதந்தோறும், 30,000 முதல் 40,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
இது குறித்து ராயபுரம் உதவி செயற்பொறியாளர் பழனி கூறியதாவது:
ஒரு டன் தேங்காய் மட்டை 500 ரூபாய்க்கும், பிளாஸ்டிக், தெர்மாகோல், துணி ஆகியவை தலா 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செருப்புகள், பள்ளி பைகள் கிலோ தலா 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும், ஒரு மெத்தை 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு, மாதந்தோறும் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கிடைக்கிறது. அது, துாய்மை பணியாளர்களுக்கு சன்மானமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

