/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை மக்களின் வசதிக்காக எழில் நகரில் மாற்று பாதை திறப்பு
/
வடசென்னை மக்களின் வசதிக்காக எழில் நகரில் மாற்று பாதை திறப்பு
வடசென்னை மக்களின் வசதிக்காக எழில் நகரில் மாற்று பாதை திறப்பு
வடசென்னை மக்களின் வசதிக்காக எழில் நகரில் மாற்று பாதை திறப்பு
ADDED : செப் 12, 2024 12:22 AM

கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகே எழில் நகரில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, தினமும் 20 முறைக்கு மேல் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது.
இதனால், தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், நெரிசலில் சிக்கி தவித்தன. 40 ஆண்டு காலமாக, இதே நிலைமை தொடர்ந்தது.
இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, மார்ச் 8ம் தேதி, மேம்பாலம் அமைப்பதற்காக, அமைச்சர் உதயநிதி தலைமையில் பூமி பூஜை நடந்தது. மேம்பால பணிகளுக்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டது. இதனால், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக, கொருக்குப்பேட்டை, அன்னை சத்யா நகர் 1வது தெருவில் உள்ள ரயில்வே இடத்தில், மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எட்டு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
அவற்றில் குடியிருந்தோருக்கு, மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் செலவில், அன்னை சத்யா நகர், சுண்ணாம்பு கால்வாய் ரயில்வே இணைப்பு சாலையில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி கடந்தாண்டு, செப்டம்பரில் துவங்கியது.
பணிகள் முடிந்தநிலையில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

