/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மேம்பால மெட்ரோ ரயில் பணி துவக்கம்
/
சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மேம்பால மெட்ரோ ரயில் பணி துவக்கம்
சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மேம்பால மெட்ரோ ரயில் பணி துவக்கம்
சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மேம்பால மெட்ரோ ரயில் பணி துவக்கம்
ADDED : ஜூன் 16, 2024 12:19 AM

சென்னை, சென்னையில் இரண்டாவது கட்டமாக, மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தொலைவில், மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீ., துாரம் அமைகிறது.
ஓ.எம்.ஆர்., சாலையில் நேருநகர் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் மேம்பால பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாாக நடந்து வருகின்றன.
நிலம் கையகப்படுத்தும் பிரச்னை மற்றும் நிறுவனம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், சோழிங்கநல்லுார் - சிறுசேரி வரை, 10 கி.மீ. துாரம் மேம்பால பாதை பணி துவங்குவதில், தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், போதிய அளவில் நிலம் கையகப்படுத்தி, 'டெண்டர்' வாயிலாக தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது இந்த பகுதியில் மெட்ரோ மேம்பால பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
சிறுசேரி, செம்மஞ்சேரி, நாவலுார் சாலை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, நடுவில் கனரக இயந்திரங்களை அமைத்து பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சோழிங்கநல்லுார் - சிறுசேரி பகுதியில் பணியை மேற்கொள்ள, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், பணியை துவங்காததால், அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
தற்போது, புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணியை துவங்கி உள்ளோம். பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, 2027ல் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

