/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்
/
வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்
வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்
வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்
ADDED : ஏப் 05, 2024 12:28 AM

திருவொற்றியூர்,
தமிழகத்தில், வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை கணினி முறையிலும், நேரடியாகவும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதை எதிர்த்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர், காலடிப்பேட்டை நீதிமன்ற வாயில் முன், நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணியன் கூறியதாவது:
நவீன காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதனால், 'இ - பைலிங்' செய்யலாம், நேரடியாகவும்மனு தாக்கல் செய்யலாம் என்ற நிலை இருக்க வேண்டும். அவசர நேரத்தில், மற்றொரு வழக்கறிஞர் மூலம் வாய்தா பெற முடியும். ஆனால், இ - பைலிங் முறைக்கு கணினி வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.