/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் கட்டுமான பணி மேற்கொள்ள கூடாது சி.எம்.டி.ஏ.,வுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ADDED : மே 22, 2024 12:32 AM
சென்னை, 'மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதலின்றி, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது' என, சி.எம்.டி.ஏ.,வுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான- சி.எம்.டி.ஏ., ஒருங்கிணைந்த கடலோர சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் சைக்கிள் பாதை அமைத்தல், திறந்தவெளி திரையரங்கம், பூங்கா, கடைகள், திறந்தவெளி பார்க்கிங், மரப்பாலம், கடல் காட்சி பாலம், மீனவர் சமூகக்கூடம், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள், கடல் உணவு விற்பனைக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவரும், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், சி.எம்.டி.ஏ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி, கடலோர மண்டல ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் இல்லாமல், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில், எவ்வித கட்டுமான பணிகளையும் சி.எம்.டி.ஏ., மேற்கொள்ளக் கூடாது' என உத்தரவிட்டனர்.