/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒப்பந்தம் விட்டும் துவங்காத எரிவாயு தகன மேடை பணிகள்
/
ஒப்பந்தம் விட்டும் துவங்காத எரிவாயு தகன மேடை பணிகள்
ஒப்பந்தம் விட்டும் துவங்காத எரிவாயு தகன மேடை பணிகள்
ஒப்பந்தம் விட்டும் துவங்காத எரிவாயு தகன மேடை பணிகள்
ADDED : ஆக 12, 2024 03:07 AM
நொளம்பூர்:நொளம்பூரில், 1.47 கோடி ரூபாய் செலவில் எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு ஓராண்டுகள் கடந்துள்ளன. ஆனால், இன்னும் பணிகள் துவக்கப்படாததால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வளசரவாக்கம் மண்டலம், 143வது வார்டில் 80,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின், போதிய சுடுகாடு இல்லாமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நொளம்பூர் நகராட்சியாக இருந்த போது, நொளம்பூர் யூனியன் சாலையில் அமைக்கப்பட்ட, விறகில் எரிக்கும் சுடுகாட்டை பயன்படுத்தி வந்தனர்.
இதனால், தங்கள் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 1.47 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
அதன் பின் ஒப்பந்தம் விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால், கடந்த ஓராண்டாக எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தடைபட்டுள்ளன.
எனவே, ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து, சுடுகாடு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

