ADDED : மே 08, 2024 12:05 AM
பெரம்பூர், பெரம்பூர், அம்பேத்கர் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் கலாநிதி, 42; பெயின்டர். இரு நாட்களுக்கு முன் இரவு, பெரம்பூர் பிருந்தா திரையரங்கம் அருகே சென்ற போது, மர்மநபர்கள் இருவர் வழிமறித்து, கலாநிதியிடம் வீண் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கினர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த கலாநிதி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், இதுகுறித்து திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பெரம்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 20 மற்றும் அவரது நண்பர் தாமோதரன் தெருவைச் சேர்ந்த சிஜில் ஆகிய இருவரும் குடிபோதையில் கலாநிதியை தாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று இருவரையும் கைது செய்த திரு.வி.க., நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

