/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியருக்கு இலவச நுரையீரல் பரிசோதனை
/
மாணவியருக்கு இலவச நுரையீரல் பரிசோதனை
ADDED : ஆக 28, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் இயங்கிவரும் 'ஆஸ்துமா அண்டு அலர்ஜி ரிசோர்ஸ் சென்டர்' மற்றும் 'கற்பக சுவாசாலயா' இணைந்து நுரையீரல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
அந்தவகையில், மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரின் உடல் ஆரோக்கியம் பேணும் வகையில், இலவச நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் ஆஸ்துமா விழிப்புணர்வு காணொலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
முகாமில், கணினி வாயிலாக மாணவியரின் நுரையீரல் செயல்பாடுகள் கண்டறிந்து, மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

