/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் டி.எஸ்.பி., ஜெயகுமார் மரணம்
/
முன்னாள் டி.எஸ்.பி., ஜெயகுமார் மரணம்
ADDED : மார் 31, 2024 02:15 AM

சென்னை:உடல் நலக்குறைவால், முன்னாள் டி.எஸ்.பி., ஜெயகுமார் நேற்று காலமானார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 62. இவர், தமிழக காவல் துறையில், 1987ல், நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார்.
இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சென்னை, சீர்காழி, மதுரை, கொடைக்கானல், துாத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.
ஜெயகுமார், டி.எஸ்.பி.,யாக துாத்துக்குடியில் பணிபுரிந்தபோது, 2020ல் ஓய்வு பெற்றார். இவர், சென்னை சோழிங்கநல்லுார் விப்ரோ தெருவில், குடும்பத்துடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால், அபிராமபுரத்தில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை, 10:17 மணியளவில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜெயகுமாரின் உடல், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள இவரது இல்லத்தில் இருந்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று காலை 10:00 மணியளவில், ஈஞ்சம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு, மனைவி சுகிர்தாவும், லட்சுமணன் தீபக் ராஜ், சுஜெய் பரிஷத் என்ற மகன்களும் உள்ளனர்.

