/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொட்டி நீரில் மூழ்கிய போதை பிளம்பர் உயிரிழப்பு
/
தொட்டி நீரில் மூழ்கிய போதை பிளம்பர் உயிரிழப்பு
ADDED : ஆக 21, 2024 12:21 AM
சென்னை, புதுப்பேட்டை, டிரான்ஸ்போர்ட் சந்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 47, பிளம்பர்.
நேற்று முன்தினம் இரவு, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் வசித்து வரும் மஜித் மதர்சா, 33 என்பவரது வீட்டில், கீழ் நிலை நீர் தேக்க தொட்டியில் உள்ள குழாயை சீரமைக்க சசிகுமார் சென்றார்.
அப்போது தொட்டியில், 13 அடிக்கு தண்ணீர் இருந்தது. சசிகுமார் மதுபோதையில் இருப்பதை கவனித்த வீட்டின் உரிமையாளர், அவரை திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளார்.
இருப்பினும் பழுது பார்க்கும் பணியில் இறங்கிய சசிகுமார், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து எழும்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்நிலையில், தனது அண்ணனை வேலைக்கு அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு வழங்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என, எழும்பூர் போலீசில் சசிகுமாரின் தங்கை கலா,38, என்பவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

