/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
/
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
ADDED : ஜூன் 28, 2024 12:30 AM
சென்னை, தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கேரளா மாநிலம் கொச்சுவேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
l நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 7 முதல் 21 வரை நீட்டித்து இயக்கப்படும்
l தாம்பரம் - நாகர்கோவில் இடையே திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 8 முதல் 22 வரை நீட்டித்து இயக்கப்படும்
l தாம்பரம் - கேரளா மாநிலம், கொச்சுவேலி இடையே வாரம்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 4 முதல் 20 வரை நீட்டித்து இயக்கப்படும்
l கொச்சுவேலி - தாம்பரம் இடையே வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 5 முதல் 21 வரை நீட்டித்து இயக்கப்படும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
11 ரயில் ரத்து 'வாபஸ்'
தெற்கு கிழக்கு ரயில்வேயில், ரயில் பாதை மேம்பாட்டுப் பணி காரணமாக, பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், 11 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
தற்போது, பராமரிப்பு பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவு ரயில்களின் ரத்தை வாபஸ் பெற்று, வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி - தாம்பரம் அந்த்யோதயா ரயில்கள், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - அகர்தலா, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மால்டா டவுன் உட்பட 11 விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

