/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு விபரீதம் சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு விபரீதம் சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு விபரீதம் சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு விபரீதம் சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
ADDED : ஜூன் 30, 2024 12:26 AM
சென்னை, சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், 'தியாகராயநகர் தொகுதி, 141வது வார்டு முத்துரங்கன் சாலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அரசு முன்வருமா?' என, அத்தொகுதியின் தி.மு.க., ---- எம்.எல்.ஏ., கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, 'சென்னை, தியாகராய நகர் தொகுதி, வார்டு எண் 141ல் உள்ள 57 தெருக்களில், 74,000 மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள முத்துரங்கன் சாலை பகுதிக்கு, தினமும் காலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை குடிநீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த, 24 மணி நேரம் நேரடியாக, வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்க, விரிவான திட்ட அறிக்கை ஒடிசா நிறுவனம் வழியே தயாரிக்கப்படுகிறது. இப்பணி முடிவடையும்போது, 24 மணி நேரம் குடிநீர் வழங்கப்படும்.
புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அவசியமில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முத்துரங்கன் சாலை பகுதியில், அவசியம் தேவை ஏற்பட்டால் குடிநீர் தொட்டி அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
இதைத் தொடர்ந்து, 'தியாகராயநகர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் பிரச்னை உள்ளது. குறிப்பாக ஏழு வார்டுகளில், இந்த பிரச்னை அதிகமாக உள்ளது. கழிவு நீர் பாதையை சீரமைக்க வேண்டும்' என்றார்.
'இந்த ஆண்டு வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை குடிநீர் வழங்கல் துறைக்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது.
அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்' என, அமைச்சர் நேரு பதிலளித்தார்.

