/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முக்கிய சிக்னல்களில் டிஜிட்டல் பலகை
/
முக்கிய சிக்னல்களில் டிஜிட்டல் பலகை
ADDED : ஏப் 16, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில், வாகன ஓட்டிகள் வசதிக்காக, பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களில், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
முன்னதாக சோதனை ஓட்டமாக, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலில், டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது.
இதற்கு, வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணியில், போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் முக்கிய பகுதிகளும், அவற்றை அடைவதற்கான நேரமும் காட்டப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

