/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
/
திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
ADDED : மே 14, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி மண்டலம், வார்டு 184க்கு உட்பட்ட பஞ்சாயத்து சாலையில் வாய்க்கால் அகலத்தில் திறந்தவெளி கால்வாய் உள்ளது. 500 மீ., நீளத்திற்கு மூன்று தெருக்கள் வழியாகச் செல்லும் இந்த கால்வாயில் கழிவுநீர் கலந்து, பல மாதங்களாக தேங்கி நிற்கிறது.
இதனால், கொசு பெருக்கம் அதிகரித்து, பகுதிவாசிகள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த கால்வாயை சீரமைத்து, மேல்பகுதியை கான்கிரீட் சிமென்ட் கலவையால் மூட வேண்டும்.
- சி.அருள்மொழி, பெருங்குடி.

