/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் குன்றத்துாரில் அடிக்கடி விபத்து
/
நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் குன்றத்துாரில் அடிக்கடி விபத்து
நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் குன்றத்துாரில் அடிக்கடி விபத்து
நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் குன்றத்துாரில் அடிக்கடி விபத்து
ADDED : ஜூலை 23, 2024 12:30 AM

குன்றத்துார், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, அதிக போக்குவரத்து உடைய சாலையாக மாறி வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 'சிப்காட்' பகுதிக்கு, இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
பூந்தமல்லி, போரூர், பல்லாவரம், தாம்பரம், படப்பை பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
இந்நிலையில், இச்சாலையில் நல்லுார், புதுப்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்துார் பகுதிகளில், பசு மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.
இவை, சாலையில் படுத்து உறங்குவதால், பணி முடித்து இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர், மாடுகளை பறிமுதல் செய்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.