ADDED : மார் 28, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மதிருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேதபாராயண ரிலிஜியஸ் டிரஸ்ட் சார்பில் நடந்த, 86வது வேத பாராயணம், கும்பகோணத்தில் சமீபத்தில் நிறைவடைந்தது.
கும்பகோணம் காஞ்சி மடத்தில், ஸ்வஸ்தி வசனத்துடன், பிப்., 21ல் துவங்கி, 10 நாட்கள், உத்திராதி மடத்தில் பாராயணம் நடந்தது.
முதல் நாளிலிருந்தே மஹா ருத்ர யாகமும் நடந்தது. 29ம் தேதி, சாகையில் கல் வைத்த வார வேதத் தேர்வு நடந்தது.
அடுத்த ஆண்டு, பிப்., 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை, திருவெண்காட்டில் நடைபெற உள்ளது.
இத்தகவல்களை, டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் சந்திரன் தெரிவித்தார்.

