/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்
/
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்
ADDED : ஏப் 20, 2024 12:15 AM

வியாசர்பாடி,வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விஜய் என்பவர், நேற்று காலை ஓட்டு போட சென்றார்.
அப்போது, அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாகவும், தாமரைக்கு ஓட்டு விழுந்ததாகவும் கூறி, அங்கு இருந்த கட்சியினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க., பிரமுகர்கள், ஓட்டுசாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
தேர்தல் அதிகாரி, ஓட்டுப்பதிவு இயந்திர பொறியாளர் இயந்திரத்தை சரிபார்த்தனர். அப்போது, எந்த பிழையும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. எனினும், 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

