/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் நீர் மாதிரி ஆய்வுக்கு சேகரிப்பு
/
முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் நீர் மாதிரி ஆய்வுக்கு சேகரிப்பு
முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் நீர் மாதிரி ஆய்வுக்கு சேகரிப்பு
முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் நீர் மாதிரி ஆய்வுக்கு சேகரிப்பு
ADDED : செப் 13, 2024 12:26 AM
சென்னை, கொசஸ்தலையாறு கடலில் கடக்கும் எண்ணுார் முகத்துவாரத்தில், நீர் திடீரென மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானது.
இதன் எதிரொலியாக, இப்பிரச்னைக்கு தீர்வு காண, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆரணியாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர், எண்ணுார் முகத்துவாரத்திற்கு நேற்று நேரில் சென்றனர்.
அங்கு, நீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை உறுதி செய்தனர். ஆனால், நீர் மஞ்சள் நிறமாக மாறிய காரணம் தெரியவில்லை. இதையடுத்து, படகில் சென்று, மஞ்சள் நிற நீர் மாதிரிகளை அதிகாரிகள் பாட்டிலில் சேகரித்தனர்.
இதை, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக, அரசிற்கும் முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.