/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு
/
ரூ.50,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரி மீது வழக்கு
ADDED : மே 17, 2024 12:11 AM
சென்னை, கீழ்ப்பாக்கம், குர்னி அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் மதுகுமார். இவர், கடந்த ஏப்ரல் மாதம், சீனாவிலிருந்து பாலிதீன் துணிகளை கப்பல் வாயிலாக இறக்குமதி செய்துள்ளார். அதற்கான இறக்குமதி வரிகளையும் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட துணிகளின் உண்மையான மதிப்பைக் கண்டறிந்து, அதற்கேற்ப கூடுதல் வரி செலுத்தும்படி கூறிய சுங்கத்துறை அதிகாரி மணீஷ் கூறியுள்ளார்.
பின், தனக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் மதிப்பை குறைவாகக் காட்டி, வரியை குறைவாக செலுத்தும்படி செய்வேன் எனக்கூறி உள்ளார்.
இதுகுறித்து மதுகுமார், சி.பி.ஜ., வசம் புகார் அளித்தார். விசாரணையில், சுங்க அதிகாரி மணீஷ் லஞ்சம் கேட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து மணீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.

