/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டையுடன் சாலையில் ரகளை மனநலம் பாதித்த நபரால் சலசலப்பு
/
கட்டையுடன் சாலையில் ரகளை மனநலம் பாதித்த நபரால் சலசலப்பு
கட்டையுடன் சாலையில் ரகளை மனநலம் பாதித்த நபரால் சலசலப்பு
கட்டையுடன் சாலையில் ரகளை மனநலம் பாதித்த நபரால் சலசலப்பு
ADDED : மே 08, 2024 12:06 AM

ஆவடி,
சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, டி.ஐ., கம்பெனி அருகே, வாலிபர் ஒருவர் அரைகுறை ஆடையில், கையில் கட்டையுடன், வாகன ஓட்டிகளை நேற்று அச்சுறுத்தி வந்துள்ளார்.
அவ்வழியே வந்த வெள்ளை நிற 'ஹோண்டா' ரக காரை வழிமறித்த அந்த வாலிபர், காரை நகர விடாமல் கையில் வைத்திருந்த கட்டையால் தாக்க முயன்றுள்ளார்.
இதை வேடிக்கை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, சாலையில் தடுமாறி விழுந்துள்ளனர். இதில், குழந்தைக்கு தலையில் அடிபட்டு மயங்கியது.
அதிர்ச்சியடைந்த தம்பதி, அவ்வழியே சென்ற காரில் குழந்தையை ஏற்றி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், குழந்தையை அந்த வாலிபர் தாக்கியதாக கூறி, பொதுமக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
ஆவடி போலீசார், 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட அந்த வாலிபரை மீட்டனர்.
பின், முதலுதவி சிகிச்சை அளித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.