/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காங்கிரசை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
காங்கிரசை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 14, 2024 12:51 AM

சென்னை, காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடாவை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அங்கு பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்தனர். அவர்களை, ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்த போலீசார் உடனுக்குடன் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்களை, நுங்கம்பாக்கம் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அங்கு, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அளித்த பேட்டி:
காங்கிரஸ், தமிழினத்தை கொச்சைப்படுத்தியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த சாம் பிட்ரோடோ தொடர்ந்து இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்.
தமிழர்களை ஆப்ரிக்கர்கள் என்று சொல்லி, இன மோதல்களை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இதை, தி.மு.க., - காங்கிரஸ் இடம்பெற்றுள்ள, 'இண்டியா' கூட்டணியில் ஒருவர் கூட கண்டிக்கவில்லை. இது, தமிழக மக்களுக்கு தி.மு.க., செய்கின்ற துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.

