/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள்: பயணியர் கடும் அவதி
/
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள்: பயணியர் கடும் அவதி
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள்: பயணியர் கடும் அவதி
பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள்: பயணியர் கடும் அவதி
ADDED : ஏப் 22, 2024 01:26 AM

ஆவடி:ஆவடி புதிய ராணுவ சாலையில், மார்க்கெட் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, ஆவடியில் இருந்து திருவேற்காடு, பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் தாம்பரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.
பெண்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் என, எப்போதும் மக்கள் நெரிசலுடன் இந்த பேருந்து நிறுத்தம் காட்சி அளிக்கும்.
ஆவடி துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள இந்த பேருந்து நிறுத்தத்தை மறைத்து, தினமும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பால், பேருந்து ஓட்டுனர்கள் சாலையில் கண்டமேனிக்கு பேருந்தை நிறுத்தி, பயணியரை ஏற்றி இறக்குகின்றனர். இதனால், பேருந்துகளின் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அதேபோல், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தலையிட்டு, விதிமீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, சென்னையில் உள்ளது போன்று, பயணியரை ஏற்றி இறக்க, பேருந்து நிறுத்தங்களில், பேருந்துகளுக்கு தனிவழி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

