/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு
/
தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு
தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு
தொழுவமாக மாறிய நடைபாதை திருவல்லிக்கேணியில் சீர்கேடு
ADDED : ஜூலை 22, 2024 02:16 AM

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணியில் கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் பெரும்பாலும், பாபு ஜெகஜீவன் சாலையில் உள்ள நுழைவாயிலை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இங்குள்ள நடைபாதையை பயன்படுத்த முடியாதபடி, மாடுகள் கட்டப்பட்டு உள்ளன.இதனால், வேறு வழியின்றி சாலையில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் குழந்தைகளுடன் கர்ப்பிணியர் நடந்து செல்கின்றனர்.
எனவே, நடைபாதையை மாட்டு தொழுவமாக பயன்படுத்தி வரும் மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.