ADDED : செப் 12, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் 144வது வார்டில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் அருகே போலீஸ் சந்தில் பழைய காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது.
இங்கு, பல்வேறு வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி முழுதும் புதர் மண்டி, வாகனங்கள் மீது செடி கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது.
இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் இருந்து கொசு உற்பத்தியும் அதிகரித்து, அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
- மா.பழனிமுத்து, மதுரவாயல்.

