/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சித்தாமூர் பட்டியில் அடைக்கப்பட்ட 26 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து பலி
/
சித்தாமூர் பட்டியில் அடைக்கப்பட்ட 26 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து பலி
சித்தாமூர் பட்டியில் அடைக்கப்பட்ட 26 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து பலி
சித்தாமூர் பட்டியில் அடைக்கப்பட்ட 26 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : மே 15, 2024 12:44 AM

சித்தாமூர், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 63. செம்மறி ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள பட்டியில் அவற்றை அடைத்து வைத்தார். பட்டியைச் சுற்றி இரும்பு வேலி அமைத்துள்ளார்.
வீட்டிற்கு மின் இணைப்பு ஏற்படுத்தும் மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 'ஸ்டே' கம்பி, ஆட்டுப்பட்டியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புகம்பி வேலியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, வெப்பச்சலனம் காரணமாக, திடீரென மழை பெய்துள்ளது.
அப்போது, மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு, ஸ்டே கம்பி வாயிலாக பட்டியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள், இரும்புக்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து 26 ஆடுகள் மயங்கி கிடந்தன.
காலை 6:00 மணிக்கு, ஏழுமலை எழுந்து பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்த ஆடுகளில் அசைவு இல்லாததால், இதுகுறித்து காவல் துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் வந்து பார்த்துபோது அவை உயிரிழந்தது இறந்தது.
மருத்துவர்கள், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இது குறித்து, சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

