/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி
/
சென்னையில் 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி
ADDED : மே 14, 2024 12:34 AM
சென்னை,தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 'நீங்களும் தொழில் அதிபராகலாம்' என்ற தலைப்பில், 10 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, 16ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ளது.
நாளை மறுதினம் முதல் வரும் 29ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். தொழில் முனைவோர் அறிமுகம், வணிக நெறிமுறைகள் மற்றும் அடிப்படைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வகைப்பாடு பதிவுகள் குறித்த விளக்கங்கள், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் நடைமுறைகள் குறித்து விளக்கப்படும்.
பயிற்சியில் ஆர்வம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு படித்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் பயனாளிகளுக்கு, குறைந்த வாடகையில், 'ஏசி' தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, www.editn.in இணையதளத்தை பார்வையிடவும். மேலும் விபரங்களுக்கு, 7010143022, 8668102600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

