/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமையுமா?
/
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமையுமா?
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமையுமா?
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமையுமா?
ADDED : செப் 18, 2024 08:45 PM
செங்கல்பட்டு:பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை - -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச்சாவடி உள்ளது.
இவ்வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இங்கு, சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில நேரங்களில் இவ்வழியாகச் செல்லும் சிலர், கட்டணம் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் ஏற்படும் தகராறில், சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்துகின்றனர்.
இதுமட்டும் இன்றி, அப்பகுதியில் வெளியூர் செல்ல காத்திருக்கும் பயணியரிடம் நகை பறிப்பு மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும், அப்பகுதியில் அடிக்கடி அரங்கேறுகின்றன.
இவற்றை தவிர்க்க, சுங்கச்சாவடி அருகிலேயே நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைத்து, சப்- - இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நியமிக்க, அரசு மற்றும் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

