/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் சமூக நலக்கூடம் அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
சித்தாமூரில் சமூக நலக்கூடம் அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சித்தாமூரில் சமூக நலக்கூடம் அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சித்தாமூரில் சமூக நலக்கூடம் அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 15, 2025 03:48 AM
சித்தாமூர்: சித்தாமூரில் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சித்தாமூர் சுற்று வட்டாரத்தில் சரவம்பாக்கம், பழவூர், கன்னிமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம், மேல்மருவத்துார், செய்யூர், சூணாம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மையப்பகுதியாக சித்தாமூர் உள்ளது.
இப்பகுதிக்கு அனைத்து பகுதியிலும் இருந்து, போக்குவரத்து வசதி உள்ளது.
ஒன்றியத்தின் தலைமை இடமாக உள்ள சித்தாமூர் பகுதியில் சமூகநலக்கூடம் இல்லாததால், மக்கள் தங்களது குடும்பங்களில் நடக்கும் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
தனியார் திருமண மண்டபங்களில் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர்.
தனியார் மண்டபங்களில் நடத்த போதிய பொருளாதார வசதி இல்லாதவர்கள், தங்களது இல்லங்களில் நடத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, வீடுகளில் இடவசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, சித்தாமூர் பகுதியில் சமூக நலக்கூடம் அமைத்து, அதன் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

