/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு திருவள்ளூர் சாய்சர்வேஷ், லஷ்மி தகுதி
/
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு திருவள்ளூர் சாய்சர்வேஷ், லஷ்மி தகுதி
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு திருவள்ளூர் சாய்சர்வேஷ், லஷ்மி தகுதி
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு திருவள்ளூர் சாய்சர்வேஷ், லஷ்மி தகுதி
ADDED : பிப் 19, 2024 11:59 PM
சென்னை:தமிழக சதுரங்க சங்கம் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, திருமுல்லைவாயிலில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 9, 12, 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட, இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில், 15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெறுவோர், மாநில சதுரங்க போட்டியில், திருவள்ளூர் மாவட்டம் சார்பில் பங்கேற்பர்.
அதன்படி, நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் சாய் சர்வேஷ், தனிஷ் தலா 5.5 புள்ளிகள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றனர். சிறுமியரில் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் லஷ்மி, ஸ்ரீஹரிணி தலா 5.5 புள்ளிகள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்.
ஆண்கள், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், நவீன் முதல் இடம், சூர்யா இரண்டாம் இடம் பிடித்தனர். பெண்கள், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சந்தான லஷ்மி, ஹரிணி முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தனர்.
அனைவரும், அடுத்த மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் போட்டியாளர்களாக களமிறங்குவர்.

