/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
/
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : பிப் 14, 2024 10:26 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு பயணியர் காயமுற்றனர்.
இதை தவிர்க்கும் விதமாக, மதுராந்தகம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன், அச்சிறுபாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள புறவழிச்சாலையில் பயணியர் நிழற்குடை அமைத்தால், விபத்து தவிர்க்கப்படும் என கண்டறியப்பட்டது.
அதன்படி, மதுராந்தகம் காவல் துறை கண்காணிப்பாளர் சிவசக்தி ஆலோசனையின்படி, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, புறவழிச்சாலை பகுதியில் உள்ள மையத் தடுப்புகளை அகற்றி, புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
பயணியர் நிழற்குடை அமைக்கப்பட உள்ள பகுதியில், தற்போது மண் கொட்டி சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

