/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பித்த குளத்தில் கழிவுநீர் கலப்பு ரூ.75 லட்சத்தில் செய்த பணி வீண்

ADDED : மார் 11, 2024 04:35 AM

கண்ணகி நகர் : சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, கண்ணகி நகரில் 4.50 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. சாலை மட்டத்தில் குப்பை, சகதியாக இந்த குளத்தை, 3 ஏக்கர் ஒரு பகுதியாகவும், 1.50 ஏக்கர் மற்றொரு பகுதியாகவும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தன்னார்வ அமைப்பு வாயிலாக, 75 லட்சம் ரூபாயில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. குளத்தை ஆழப்படுத்தி, நடைபாதை, சுற்றி வேலி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
மழைக்காலத்தில் 3 ஏக்கர் குளம் நிரம்பி, அதன் உபரி நீர் 1.50 ஏக்கர் குளத்தை நிரப்பும் வகையில் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து பராமரிக்க, மாநகராட்சி வசம் குளம் ஒப்படைப்பட்டது.
இந்நிலையில், 1.50 ஏக்கர் குளத்தில், வடிகால் வாயிலாக கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், சமீபத்திய மழையில் நிரம்பிய தண்ணீர், கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அருகில் வசிப்போர் சுவாச பிரச்னையால் சிரமப்படுகின்றனர்.
கழிவுநீராக மாறிய குளத்து நீரை வெளியேற்றி, வடிகாலில் வரும் நீரை, பகிங்ஹாம் கால்வாயில் திரும்பிவிட வேண்டும். இரவில், குளக்கரையில் உள்ள இரும்பு பொருட்களை திருடுவதால், தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.