/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில அளவிலான கூடைப்பந்து இந்துஸ்தான் அகாடமி அபாரம்
/
மாநில அளவிலான கூடைப்பந்து இந்துஸ்தான் அகாடமி அபாரம்
மாநில அளவிலான கூடைப்பந்து இந்துஸ்தான் அகாடமி அபாரம்
மாநில அளவிலான கூடைப்பந்து இந்துஸ்தான் அகாடமி அபாரம்
ADDED : ஏப் 24, 2024 01:36 AM

சென்னை:சென்னையில் துவங்கிய, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், இந்துஸ்தான் அகாடமி அணி வெற்றி பெற்றது.
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 18வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னையில் நேற்று துவங்கியது.
போட்டிகள், தி.நகர், வெங்கட்நாராயணா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மைதானத்திலும், பெரியமேடு நேரு விளையாட்டு மைதானத்திலும் நடக்கின்றன.
இதில், ஐ.சி.எப்., - எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் வங்கி, சத்யபாமா, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில், 75 அணிகளும், பெண்களில் 26 அணிகளும் பங்கேற்றுள்ளன.
போட்டிகள், அரையிறுதிக்கு முந்தைய சுற்று வரை, 'நாக் - அவுட்' முறையிலும், அரையிறுதியில் இருந்து, 'லீக்' முறையிலும் நடக்கின்றன.
நேற்று காலை, நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், இந்துஸ்தான் அகாடமி மற்றும் 6 அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில் இந்துஸ்தான் அகாடமி, 60 -- 40 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் நாகன் மெமோரியல் அணி 84- 64 என்ற கணக்கில் ஸ்ரீ ராகவேந்திரா கிளப் அணியை தோற்கடித்தது.
சக்ஸஸ் அணி, 47--30 என்ற கணக்கில் யூனிக்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து, மே 1ம் தேதி வரை நடக்கின்றன.

