/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
/
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ADDED : நவ 16, 2024 01:20 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர், இணை வேந்தர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் தலைமை தாக்கினர். துணை வேந்தர் முத்தமிழ்ச்செல்வன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குனர் மகேஷ் சந்திர மிஸ்ரா பங்கேற்று, பல்வேறு துறைகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு, வாழ்வில் முழுமையடைய பல்வேறு நெறிமுறைகளை வழங்கினார்.
இதில், அறிவியல் மற்றும் மனிதவியல், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில், 10,848 மாணவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது.