/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
கல்லாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கல்லாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கல்லாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 26, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மதுராந்தகம் பகுதி சென்னை- -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் மார்க்கத்தில், கல்லாற்று பாலத்தின் கரைப்பகுதியில், மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள், ஹோட்டல் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கழிவுகளில் ஈய்க்கள் மொய்த்து, புழுக்கள் உண்டாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, இப்பகுதியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச்செல்லும் நபர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.