/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினத்தில் வடிகால் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
/
புதுப்பட்டினத்தில் வடிகால் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
புதுப்பட்டினத்தில் வடிகால் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
புதுப்பட்டினத்தில் வடிகால் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
ADDED : டிச 21, 2025 04:18 AM
புதுப்பட்டினம்: புதுப்பட்டினத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடந்து செல்கிறது. வர்த்தக இடமான இப்பகுதியில், கடைகள் நிறைந்துள்ளன.
சாலையின் பிரதான பகுதியில் கடந்த 2015ல் மைய தடுப்புடன் மேம்படுத்தப்பட்டது. சற்று வளைவான இப்பகுதியில், சாலையின் கிழக்கில் உயர்ந்தும், மேற்கில் தாழ்வாகவும் அமைந்தது. மழையின்போது தாழ்வான பகுதியில், குளம்போல் தண்ணீர் தேங்குகிறது.
கடைகளுக்கு முன்புறம் தண்ணீர் சூழ்ந்து, பல நாட்கள் தேங்கி, கடைகளுக்கு செல்வோர், வியாபாரிகள் சகதியில் கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படுகிறது. பேருந்தில் இருந்து இறங்கும், ஏறும் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
இப்பாதிப்பை தவிர்க்க, மழைநீர் வடிகால்வாய் அமைக்குமாறு, பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கி, கலெக்டரிடம், திட்ட அனுமதி பெற்றுள்ளதாக, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தனபால் தெரிவித்தார்.

