/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆரில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
/
இ.சி.ஆரில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
ADDED : மார் 11, 2024 10:46 PM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை தடத்தில், மாமல்லபுரத்தில் புறவழி, அரசு மருத்துவமனை, பூஞ்சேரி ஆகிய இடங்களில் முக்கிய சந்திப்புகள் உள்ளன.
கடம்பாடி, குன்னத்துார், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சந்திப்புகள் உள்ளன. இத்தடத்திலிருந்து உட்புற சாலைகளுக்கும், உட்புறத்திலிருந்து இத்தடத்திற்கும் வாகனத்தை திருப்பும் ஓட்டுனர்கள், சந்திப்பு பகுதியின் அபாயத்தை உணராமல், கவனக்குறைவாக செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம், கடும்பாடியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர்; வடநெம்மேலியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் என, அடுத்தடுத்து இறந்தனர்.
இதையடுத்து, சந்திப்பு பகுதிகளில் வாகன வேகத்தை கட்டுப்படுத்த, தற்போது சாலை தடுப்புகளை போலீசார் அமைத்து வருகின்றனர்.

