/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுவிற்போரை கைது செய்ய கோரி முகையூரில் சாலை மறியல்
/
மதுவிற்போரை கைது செய்ய கோரி முகையூரில் சாலை மறியல்
மதுவிற்போரை கைது செய்ய கோரி முகையூரில் சாலை மறியல்
மதுவிற்போரை கைது செய்ய கோரி முகையூரில் சாலை மறியல்
ADDED : நவ 11, 2025 10:37 PM

கூவத்துார்: முகையூரில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முகையூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 45. இவர், அதே பகுதியில் தொடர்ந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்ததாக சுலோச்சனாவை, கடந்த 7ம் தேதி கூவத்துார் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், முகையூர் பேருந்து நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடினர்.
அப்போது, மது விற்பனை செய்யும் சுலோச்சனா குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல், 20, கனிமொழி, 19, மற்றும் திவ்யா உள்ளிட்ட மூவரை கைது செய்யக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

