/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவிலில் கொள்ளை இருவருக்கு 'காப்பு'
/
கோவிலில் கொள்ளை இருவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 19, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, போரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காரம்பாக்கத்தில் உள்ள ஒரு கோவில் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களை அழைத்த போது, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 20, சூர்யா,19, என தெரிந்தது.
மேலும் இவர்கள் போரூர், அம்பத்துார் கோவில்களில் கொள்ளையடித்த நபர்கள் என தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, மூன்று கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

