/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளையாட்டு மைதானத்தில் புதர்களை அகற்ற கோரிக்கை
/
விளையாட்டு மைதானத்தில் புதர்களை அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 26, 2025 01:36 AM

மதுராந்தகம்:பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதர்கள் நிறைந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொறப்பாக்கம் பகுதியில், உத்திரமேரூர் - மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரம், அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில், உடற்கல்வி பாடவேலையில், பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாணவர்கள் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
அதில், பள்ளி மைதானத்தில், புற்கள் நிறைந்து உள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது.
பள்ளியைச் சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டு இருப்பினும், பள்ளி பாடவேளையில் நுழைவாயில் பகுதி வழியாக கால்நடைகளை ஓட்டி வரும் அப்பகுதி மக்கள், மைதானங்களில் கால்நடைகளை விட்டு செல்கின்றனர்.
அதை தவிர்க்கும் விதமாக, பள்ளிக்கு காவலாளி அமைக்க வேண்டும்.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

