/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
மதுராந்தகம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
மதுராந்தகம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
மதுராந்தகம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : மார் 15, 2024 09:50 PM

மதுராந்தகம்:சென்னை -- விழுப்புரம் ரயில் பாதை மார்க்கத்தில், மதுராந்தகம் ரயில் நிலையம் உள்ளது. காந்தி நகர், அருங்குணம், முன்னுாத்திக்குப்பம், சாத்தனுார், சோழந்தாங்கல், தேவத்துார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சுரங்கப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.
மதுராந்தகம் ரயில் நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் நுாற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
புதுமாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வழியாக ரயில் நிலையத்திற்கு வரும் துாரம் அதிகமாக உள்ளதால், ரயில்வே சுரங்கப்பாதை வழியை, இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, பருவமழை காலம் முடிந்து, கடந்த 2 மாதங்களாக ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் புகாதவாறு, கூரை மற்றும் தரைப் பகுதி சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், சுரங்கப்பாதை வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

