/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியிலிருந்து மினிபஸ்கள் விட கோரிக்கை
/
கூடுவாஞ்சேரியிலிருந்து மினிபஸ்கள் விட கோரிக்கை
ADDED : மே 03, 2025 10:52 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்று பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள காயரம்பேடு, பெருமாட்டு நல்லுார், கீரப்பாக்கம், குமுளி, காரணை புதுச்சேரி, ஊனமாஞ்சேரி, வண்டலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு, கூடுவாஞ்சேரி நகராட்சியே முக்கிய சந்தைப் பகுதியாக உள்ளது.
இந்த ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும், பொது மக்கள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்கு செல்லவும், ஜி.எஸ்.டி., சாலைக்கு வந்து பின், பேருந்து மற்றும் ரயில் வாயிலாக பயணிக்கின்றனர்.
இவர்கள் எளிதாக வந்து செல்ல அதிக பேருந்து வசதி இல்லை. தவிர, ஊராட்சிகளின் பிரதான சாலைகளில் மட்டுமே அரசு பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதனால், உட்பகுதியில் வசிப்போர், சில கி.மீ., பயணித்து, பிரதான சாலைக்கு வந்து பின் பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, சுற்றுப்பகுதியில் உள்ள ஊராட்சிகளை இணைத்து, போதிய எண்ணிக்கையில் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

