/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் சொத்தை பதிவு செய்ய மறுப்பு சினிமா தயாரிப்பாளர் 'அப்பீல்' தள்ளுபடி
/
கோவில் சொத்தை பதிவு செய்ய மறுப்பு சினிமா தயாரிப்பாளர் 'அப்பீல்' தள்ளுபடி
கோவில் சொத்தை பதிவு செய்ய மறுப்பு சினிமா தயாரிப்பாளர் 'அப்பீல்' தள்ளுபடி
கோவில் சொத்தை பதிவு செய்ய மறுப்பு சினிமா தயாரிப்பாளர் 'அப்பீல்' தள்ளுபடி
ADDED : மார் 20, 2024 09:18 PM
சென்னை:கோவில் சொத்தை பதிவு செய்ய, பத்திரப்பதிவு துறைக்கு உத்தரவிடக் கோரி, சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சினிமா தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிர்வாக இயக்குனர், ஆர்.பி.சவுத்ரி தாக்கல் செய்த மனு:
நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2,770 சதுர அடி இடத்தில், மீரான் மற்றும் செரிப் ஆகியோர் வாடகைதாரராக இருந்தனர். இருவரிடம் இருந்து, 1992ல் சித்திக் என்பவர் இடத்தை வாங்கினார்.
மகள் பெயருக்கு 'செட்டில்மென்ட்' பத்திரத்தை பதிவு செய்ய முற்பட்டபோது, அதை திருப்பி அனுப்பினர். கோவில் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டாம் என, கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருப்பதாக, காரணம் கூறப்பட்டது.
விசாரணை நடத்தி, செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்யும்படி, பத்திரப் பதிவாளருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நிலுவையில் இருக்கும்போது, எங்களுக்கு சித்திக் விற்பனை செய்தார். முத்திரைக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி, ஆவணங்களை விடுவிக்கும்படி கோரினோம். அசல் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி, பத்திரப்பதிவு அதிகாரியிடம் இருந்து 'நோட்டீஸ்' வந்தது.
அறநிலையத்துறையின் ஆட்சேபனையை வைத்து, ஆவணங்களை பதிவு செய்வதை மறுப்பது, தவறானது. விற்பனையை பதிவு செய்யும்படி, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி எம்.தண்டபாணி ''வாடகைதாரர்களுக்கு, கோவில் அறங்காவலர்கள் மேற்கொண்ட விற்பனை பரிவர்த்தனை ரத்து செய்யப்படுகிறது. வாடகைதாரர்கள், சித்திக் என்பவருக்கு விற்பனை செய்தது; அவர், சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு விற்பனை செய்தது செல்லாது,'' என உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, சூப்பர் குட் பிலிம்ஸ் நிர்வாக இயக்குனர் சவுத்ரி மற்றும் சித்திக் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குத்தகைக்கு விடப்பட்ட கோவில் சொத்தை, அறநிலையத்துறை சட்டத்தை மீறி மாற்றம் செய்தது செல்லாது. சிவில் வழக்கில் பிறப்பித்த உத்தரவையும், அமல்படுத்த முடியாது.
ஆக்கிரமிப்பு, சொத்து அபகரிக்கும் நடவடிக்கைகளை, அரசு, அறங்காவலர்கள், பக்தர்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும். நீதிமன்றமும், மத நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறையை பின்பற்றி மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

