/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கோபுர விளக்கு அமைக்க பேரூராட்சிக்கு பரிந்துரை
/
உயர்கோபுர விளக்கு அமைக்க பேரூராட்சிக்கு பரிந்துரை
ADDED : மார் 08, 2024 09:42 PM
மாமல்லபுரம்,:மாமல்லபுரம் கடற்கரையில், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரையில் பயணியர், காலை முதல் இரவு வரை கடலின் அழகை ரசித்து மகிழ்கின்றனர்.
ஆனால், தேவைக்கேற்ப மின்விளக்குகள் இன்றி, கடற்கரை பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குற்றச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
பூஞ்சேரி சந்திப்பு பகுதியில் உள்ள உயர்கோபுர விளக்குகள், பல மாதங்களாக ஒளிராமல், இரவில் இருள் சூழ்ந்துள்ளது.
விபத்துகள், குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே, குற்றச் செயல்களை தடுக்க, கடற்கரையில் உயர்கோபுர விளக்கு அமைக்குமாறும், பூஞ்சேரி சந்திப்பு உயர்கோபுர விளக்கை ஒளிர வைக்குமாறும், மாமல்லபுரம் போலீசார், பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம், மன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றி ஒப்புதல் பெற்றுள்ளது.

