/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவருக்கு கத்திக்குத்து முதியவர் கைது
/
மாணவருக்கு கத்திக்குத்து முதியவர் கைது
ADDED : பிப் 19, 2024 11:38 PM
சென்னை:தி.நகர், தெற்கு போக் சாலை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வரதன்பாபு, 20; கல்லுாரி மாணவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி, 63, என்பவருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், வரதன்பாபு, கலைமணி வீட்டு வாசல் முன் குப்பை கொட்டியுள்ளார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வரதன்பாபு, கலைமணியை அடித்து உதைத்துள்ளார்.
ஆத்திரமடைந்த கலைமணி, வீட்டில் இருந்து கத்தி எடுத்து வந்து வரதன்பாபுவை குத்தினார். தடுக்க வந்த அவரது நண்பர் சஞ்சய் என்பவருக்கும் குத்து விழுந்தது. தேனாம்பேட்டை போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கலைமணி கைது செய்யப்பட்டார்.

