/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இந்தாண்டு 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி வேதனை! நாய் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழக்கும் அவலம் ;வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
/
செங்கையில் இந்தாண்டு 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி வேதனை! நாய் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழக்கும் அவலம் ;வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
செங்கையில் இந்தாண்டு 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி வேதனை! நாய் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழக்கும் அவலம் ;வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
செங்கையில் இந்தாண்டு 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி வேதனை! நாய் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழக்கும் அவலம் ;வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : டிச 16, 2025 05:51 AM

- நமது நிருபர் குழு -: செங்கல்பட்டு மாவட்டத்தில், காப்புக்காடுகளில் வசிக்கும் மான்கள் அடிக்கடி வெளியேறி சாலைக்கு வந்து, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில், 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ள நிலையில், வனத்துறை மெத்தனமாக செயல்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் 2,896 ஏக்கர் பரப்பிலும், கூடலுார், குமுளி, ஊனமாஞ்சேரி ஆகிய இடங்களில் முறையே 2,728, 1205, 410 ஏக்கர் பரப்பிலும், அடர்ந்த காப்புக் காடுகள் உள்ளன.
இவை தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கு 1,500க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. பரப்பில் பெரிய வண்டலுார் காப்புக் காட்டில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காப்புக் காட்டைச் சுற்றிலும், பாதுகாப்பு வேலி மற்றும் சுற்றுச்சுவர் இல்லை.
இதனால், மான்கள் அவ்வப்போது வழி தவறி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
அதிகரிப்பு பின், வனத்துறை ஊழியர்கள் அவற்றை மீட்டு, மீண்டும் காப்புக் காட்டிற்குள் விடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், காப்புக் காட்டிலிருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உண்டு ஜீரணமாகாமல் உயிரிழப்பதும், தெரு நாய்கள் கடித்து பலியாவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மறைமலை நகர் அடுத்த பனங்கொட்டூர் ஏரியில், கடந்தாண்டு பிப்., 18ம் தேதி, தண்ணீர் குடிக்கச் சென்ற, 2 வயதுடைய புள்ளி மான், சேற்றில் சிக்கி உயிரிழந்தது.
கடந்தாண்டு மே 11ம் தேதி அதிகாலை, தண்ணீர் தேடி சாலை பகுதிக்கு வந்த புள்ளி மான், பரனுார் -- மகேந்திரா சிட்டி இடையே ஜி.எஸ்.டி., சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
பவுஞ்சூர் அருகே தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில்,
கடந்த 2024 மார்ச் 16ம் தேதி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளிமான் ஒன்று பலத்த காயமடைந்தது. பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரிசோதனை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மான் உயிரிழந்தது.
அதன் பின், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை ஆய்வு செய்ததில், 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் எனத் தெரிந்தது.
பின், மான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.
கடந்தாண்டு டிச., 13ம் தேதி, சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரி அருகே, 6 மாத வயதுடைய ஆண் புள்ளி மான் குட்டி, தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது.
கடந்த மார்ச் 25ம் தேதி, கூவத்துார் பகுதியில் உள்ள பகிங்காம் கால்வாய் ஓரத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் புள்ளி மான் உடல் கிடந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை ஆய்வு செய்தனர்.
இதில், 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் எனத் தெரிந்தது.
பின், கூவத்துார் கால்நடை மருத்துவமனையில் மான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு மானை பிடித்து, தலையை மட்டும் துண்டித்து கொலை செய்திருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சத்யா, வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்பவருடன் சேர்ந்து, கடந்த நவ., 16ம் தேதி, கல்பாக்கம் அருகே மானை வேட்டையாடி, இறைச்சியை விற்க முயன்றார்.
ஆக்கிரமிப்பு இதில், கோகுலகண்ணன் கைது செய்யப்பட்டார். சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டு மட்டும், 20க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி உள்ளன.
இதில், ஊடகங்களுக்கு தெரியக்கூடாது என மறைக்கப்பட்ட சம்பவங்களையும் கணக்கிட்டால், இந்த ஆண்டில் மட்டும், 30க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி இருக்கலாம் என, விலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலுார், கூடலுார், ஊனமாஞ்சேரி, குமுளி ஆகிய நான்கு ஊராட்சிகளில், 2,930 ஹெக்டேர் பரப்பில் உள்ள காப்புக் காடுகள், முறையாக பராமரிக்கப் படவில்லை.
காப்புக் காடுகளின் கரை பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
தவிர, நீர்நிலைகளின் போக்கு கால்வாய் மற்றும் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா நிலங்களாக மாறிவிட்டன.
இதனால், காடுகளில் வாழும் மான்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
தவிர, மான்கள் விரும்பி உண்ணும் தாவர வகைகள், காப்புக் காடுகளில் வளர்க்கப்படவில்லை.
எனவே நீர் பருகவும், பசியை போக்கவும், காடுகளிலிருந்து அடிக்கடி கூட்டமாக மான்கள் வெளியேறுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பரிதாபம் இவ்வாறு வெளியேறும் மான்களில் சில, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கிறது.
நடப்பாண்டு, பிப்., 15ம் தேதி, வண்டலுார் காப்புக் காட்டிலிருந்து இரவு நேரத்தில் வெளியே வந்த மான்கள் கூட்டத்தில், ஒரு மான் மட்டும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
அதையடுத்து, பிப்., 16ம் தேதி இரவு, உணவு தேடி பெரும் கூட்டமாக வெளியேறிய மான்கள் கூட்டத்தில், மூன்று மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு, பரிதாபமாக உயிரிழந்தன. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்ததால், மான்கள் உயிரிழப்பு குறித்து வெளியே தகவல் வரக் கூடாது என, மேலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில், மான்களின் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த 4ம் தேதி, இரண்டு வயதான பெண் புள்ளி மான், கொளப்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதேபோல, கடந்த 12ம் தேதி, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், சாலையைக் கடந்த மான், 'மாருதி சுவிப்ட்' காரில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும், 30க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி இருக்கலாம்.
இதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மான்கள் உயிரிழப்பு தினமும் அரங்கேறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

