/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பதக்கங்களை குவித்த வெங்கடேஸ்வரா பள்ளி
/
பதக்கங்களை குவித்த வெங்கடேஸ்வரா பள்ளி
ADDED : செப் 30, 2024 05:57 AM
சென்னை : தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், ராயப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி, அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.
குடியரசு, மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில், ராயப்பேட்டை மண்டலத்தில் உள்ள 42 பள்ளி அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் நடந்தன. இதில், ராயப்பேட்டை, வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் 130 பேர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்தனர்.
தவிர, பூப்பந்து, இறகுப்பந்து, எறிபந்து, வலைபந்து, வளைகோல் பந்து, சதுரங்கம், கேரம், தடகளம், கபடி ஆகிய போட்டிகளில் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

