/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேற்கு வங்க வாலிபரிடம் போன் பறித்தவர் சிக்கினார்
/
மேற்கு வங்க வாலிபரிடம் போன் பறித்தவர் சிக்கினார்
மேற்கு வங்க வாலிபரிடம் போன் பறித்தவர் சிக்கினார்
மேற்கு வங்க வாலிபரிடம் போன் பறித்தவர் சிக்கினார்
ADDED : டிச 15, 2025 03:49 AM
பெரியமேடு: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முக்தார் ஆலம், 27. இவர், மேற்கு வங்கத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, 13ம் தேதி வந்தார்.
புழல் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர், பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினார்.
பெரியமேடு போலீசாரின் விசாரணையில், மொபைல் போன் பறித்து சென்றது ஒக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த ஆனந்த், 27 என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செயின் பறிப்பு திருவேற்காடு, பெரியகாலனி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன், 28: தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் பீர்க்கன்காரணை அருகே ஆலப்பாக்கம் பை பாஸ் சாலையில் பைக்கை நிறுத்தியுள்ளார்.
அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் மூவர் ரோஷனிடம் இருந்த 'ரெட்மி நோட் 8 புரோ' மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

