/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி அருகே நடுரோட்டில் கவிந்த லாரி
/
கூடுவாஞ்சேரி அருகே நடுரோட்டில் கவிந்த லாரி
ADDED : ஏப் 10, 2025 02:21 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கத்தில், சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு, 22 சக்கரம் உள்ள ராட்சத லாரி, நேற்று மதியம் சிமென்ட் பவுடர் ஏற்றிச் சென்றது.
அப்போது மதியம் 2:00 மணியளவில், அருங்கால் கிராமத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதைக் கண்ட பகுதிவாசிகள், இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். இதனால், அந்த வழித்தடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

