/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வனத்துறை அனுமதி கிடைக்காததால் காயார் ஏரி சீரமைப்பு பணி தாமதம்
/
வனத்துறை அனுமதி கிடைக்காததால் காயார் ஏரி சீரமைப்பு பணி தாமதம்
வனத்துறை அனுமதி கிடைக்காததால் காயார் ஏரி சீரமைப்பு பணி தாமதம்
வனத்துறை அனுமதி கிடைக்காததால் காயார் ஏரி சீரமைப்பு பணி தாமதம்
ADDED : மார் 12, 2024 10:50 PM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காயார் கிராமம். இக்கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மதகுகள், இரண்டு கலங்கல் உள்ளன.
ஏரியின் மதகு, கலங்கல், ஏரிக்கரைப்பகுதியை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, 1.87 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு மே மாதம், ஏரியின் மதகு, கலங்கல், கரைப்பகுதிகள் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.
எனினும், வனப்பகுதி எல்லையில் வரும் ஒரு மதகு, ஒரு கலங்கல், ஒரு பகுதி ஏரிக்கரை பகுதி மட்டும் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காயார் ஏரியின் குறிப்பிட்ட பகுதி, வனத்துறை பகுதி சார்ந்துள்ளது. வனத்துறை சார்ந்த பகுதி களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
வனத்துறையிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன், விடுபட்ட ஏரி சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

