/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் சிதறியுள்ள ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் சிதறியுள்ள ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் சிதறியுள்ள ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் சிதறியுள்ள ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 17, 2025 05:56 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் மற்றும் மண் திட்டுகள் பரவி உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக, சிங்கபெருமாள் கோவில் உள்ளது.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிக ளுக்கு சென்று வருகின்றன.
மேலும் ஆப்பூர் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்குச் சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, 138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில், மேம்பாலத்தில் உள்ள சாலைகள் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் அதிக அளவு குப்பை மற்றும் மண் திட்டுகள், ஜல்லி கற்கள் பரவி உள்ளதால், மழை பெய்யும் போது மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பிளாஸ்டிக் குப்பை, மண் துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன.
அதிக அளவில் ஜல்லி கற்களை ஏற்றிச்செல்லும் 'டாரஸ்' லாரிகளில் இருந்து சிதறி விழும் ஜல்லி கற்கள், பல்வேறு இடங்களில் பரவி உள்ளன. இதனால், சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உ ள்ளது.
இவற்றை அகற்றவும், லாரிகளில் தார்ப்பாய் மூடி செல்லவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என , வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

